உள்நாட்டு செய்தி
யாழ்.பல்கலை வவுனியா வளாகம் தரமுயர்வு
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாட்டின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் அமையவுள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல், வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கூறினார்.