Connect with us

உள்நாட்டு செய்தி

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை

Published

on

எவரேனும் ஒருவர் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்கு தாமதமானால், தடுப்பூசி நடவடிக்கைகளை மீண்டும் முதலாம் கட்டத்திலிருந்து ஆரம்பிக்கத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்தியர் பிரசன்ன குணசேகர தெரிவித்தார்.

மேலும், எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் முதலாவது டோஸினால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்டதாக நீடிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக விஷேட வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள சுமார் 90,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.