Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி

Published

on

நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 

ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து 821 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உட்பட நாட்டின் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.

நாட்டுக்குத் தேவையான மேலும் 34 லட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ய இருக்கிறது.

அடுத்த வாரமளவில் நாட்டுக்கு பத்து இலட்சம் சீனாபோம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.