உள்நாட்டு செய்தி
சட்டவிரோத மதுபான உற்பத்தி:மூவர் கைது

கினிகந்தென பகுதியில் சமயல் உபகரணங்கள் சிலவற்றை பயன்படுத்தி சட்டவிரோத மதுபான உற்பத்தியல் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகந்தென பொல்பிட்டிய ஹிட்டிகம பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு முச்சக்கர வண்டியொன்றில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
32,35 மற்றும் 38 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்;ளது.