Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை முதல் 5000 வழங்கும் திட்டம்

Published

on

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை (02) ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார்.

X-Press Pearl கப்பல் விபத்துக்கு உள்ளாகியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.

65 இலட்சம் குடும்பங்கள் இதன் மூலம் நன்மை அடையவுள்ளன.

இதேவேளை X-Press Pearl கப்பல் விபத்துக்குள்ளானமையினால் கடற்றொழில் துறைக்கு ஏற்பட்ட நஷ்டங்களை மதிப்பீடு செய்து கடற் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

நாளாந்த வருமானத்தை இழந்த மீனவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த பிளாஸ்டிக் கழிவுகள் 05 மாவட்டங்களில் கரையொதுங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலேயே அதிகளவான பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்க குறிப்பிட்டார்.