Connect with us

உள்நாட்டு செய்தி

மண் மேடு சரிந்து வீழ்ந்தால் தடைப்பட்ட வாகன போக்குவரத்து வழமைக்கு

Published

on

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தால் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை தடைப்பட்டிருந்த குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

அந்த பகுதியில் பெய்த கன மழையை அடுத்து குறித்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்தது.

மண்ணுடன் கற்களும் சரிந்து வீழ்ந்தமையால் அங்கு கடும் வாகன போக்குவரத்து நிலவியதாக எமது செய்தியாளர் கூறினார்.