உள்நாட்டு செய்தி
சுழிபுரம் கொலைச் சம்பவம், இதுவரை 12 பேர் கைது
யாழ்.சுழிபுரம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த கொலையுடன் 21 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகம் வெயிளிட்டுள்ளனர்.
சுழிபுரம் மத்தி, குடாக்கனையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 13 ஆம் திகதி இருவர் கொலைச் செய்யப்பட்டனர்.
இதில் 55 மற்றும் 32 வயதான இருவரே கொலைச் செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.