உள்நாட்டு செய்தி
அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் – கல்வி அமைச்சர்

பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அறநெறி பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் என்பனவும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.