Connect with us

உள்நாட்டு செய்தி

“இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்”

Published

on

இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும் ,தெரிவிக்கையில் கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரசு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். இதில் வைத்தியசாலைகளுக்கு பாரிய பொறுப்பு உண்டு. கடந்த சில தினங்களாக அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையை நாம் அவதானித்தோம்.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை உண்டு.

சில வேளைகளில் இந்த எண்ணிக்கை 2000 த்திலும் பார்க்க அதிகரிக்கும் நிலை உண்டு. தற்போதை இந்த நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதை எதிர்வரும் தினங்களில் அறிந்துகொள்ள முடியும்.அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்றும் தெரிவித்தார்.

மறு புறத்தில் இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் சார்பில் வழங்கப்படும் பங்களிப்பின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும் என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.