Connect with us

உள்நாட்டு செய்தி

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கு கொவிட்

Published

on

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள் 30 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.

குறித்த தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் 40 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தை அண்டியுள்ள சென்கூம்ஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பகுதிக்குள் உட்செல்லவும், வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *