உள்நாட்டு செய்தி
உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்புத்த, கெஸ்பேவ கிழக்கு, மாகந்தர மேற்கு, பெல்ஹேன மற்றும் நிவுன்கம கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிம்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் மதுகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யட்டியான மேற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ மேற்கு, சூரியபாலுவ வடக்கு, பஹல கரகஹமுன வடக்கு மற்றும் இஹல கரகஹமுன வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்குருதலுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் மீஹகஹதென்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெச்ச கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.