உள்நாட்டு செய்தி
இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானம்
இந்தியாவிடமிருந்து வாராந்தம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை தெரிவித்தார்
அதற்கமைய, வாராந்தம் 100 மெட்ரிக் தொன் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
COVID சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்தியாவிடமிருந்து ஒக்சிஜன் கொள்வனவு செய்யப்படவுள்ளது.