Connect with us

உள்நாட்டு செய்தி

சீன முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர்

Published

on

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகைத்தந்தமை பாராட்டுக்குரியது என பிரதமர் சீன பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியுள்ளார்.