உள்நாட்டு செய்தி
சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் பயனுள்ளதாய் அமைந்தாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (27) இரவு அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார்.