உள்நாட்டு செய்தி
21 ஆம் திகதி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 8.45 க்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கர்தினால் இதனை கூறியுள்ளார்.