உள்நாட்டு செய்தி
1000 ரூபா உறுப்படியாக கிடைக்கின்றதா? – ஜே.வி.பியின் சந்தேகம்
1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னணியின் யாழ்.மாட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
“1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. சித்திரை புத்தாண்டை கொண்டாட முடியாத ஒரு துர்பாக்கிய நிலையே தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆயிரம் ரூபாவுக்கு அரசாங்கமும்,தொழிற்சங்கங்களும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இன்றும் 1000 ரூபாவுக்கு வேட்டு வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஆயிரம் ரூபா அதிகரிகரிப்பை அரசாங்கம் முதலில் அரச தோட்டங்களில் வழங்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் பின்னடைவை சந்திப்பதை தவிர்க்க முடியாது. ஹட்லரை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களும் இன்று மன விரகத்தியில் உள்ளனர். வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. எனவே ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் எமது கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.