உள்நாட்டு செய்தி
ஜனாதிபதியின் புத்தாண்டு கொண்டாட்டம், மிரிஹானையில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மிரிஹானையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் நேற்று (14) புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
தனது பாரியார் அயோமா ராஜபக்ஸவுடன் இணைந்து புதுவருட சம்பிரதாயங்களுக்கு அமைய புத்தாடை அணிந்து ஜனாதிபதி புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
விசேடமாக தொழில் ஆரம்பிக்கும் சுப நேரத்தில் தமது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் மரக் கன்று ஒன்றையும் ஜனாதிபதி நாட்டி வைத்தார்.