Connect with us

உள்நாட்டு செய்தி

உயிர்த்த ஞாயிறு அறிக்கையை விவாதிக்க தயாராகும் உயரிய சபை

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  நேற்று (04) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஏதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

மார்ச் 09 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும், அதேவேளை, முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.