உள்நாட்டு செய்தி
“தந்தையே ஏன் என்னை கைவிட்டிர்….? ” புனித வெள்ளி இன்று
உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (02) கிறிஸ்து இயேசுவின் மரணத்தை நினைவுக்கூறும் புனித வெள்ளிக்கிழமை தினத்தை பக்தியோடு நினைவுகூறுகின்றனர்.
கடந்த 31 ஆம் திகதி விபூதி புதனுடன் ஆரம்பித்த புனித வாரத்தின் மிக முக்கியமான நாளாக இன்றைய புனித வெள்ளிக்கிழமை தினத்தை கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர்.
இன்றைய நாளில் உலக கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல் ஒரு சந்தியையும் அனுசரித்து வேண்டுதல் செய்வர்.
மனித குலத்தை பாவத்தில் இருந்து மீட்கவே இயேசு பிரான் இன்றைய நாளில் தனது இன்னுயிரை இன்று போன்றதொரு நாளில் பரிசுத்த வேதாகமம் சிலுவையில் அர்ப்பணித்தார் என பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.
புனித வெள்ளியானது, இயேசு மீண்டும் உயிரதெழுந்த தினமான உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு ஒரு நாள் முந்தி அனுஸ்டிக்கப்படுகின்றது.
இயேசு கிறிஸ்து கி.பி.33 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி சிலுவையில் மரித்தார் எனக் கருதப்படுகிறது.
முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவை அவரது சீடரான யூதாஸ் காரியோத்து என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது.
மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் கலவரம் வெடிக்கும் என பயந்த பிலாத்து மக்களின் விருப்பப்படியே சிலுவையில் அறைய உத்தரவிட்டதோடு, இதில் தனக்கு பங்கு இல்லை என கைக்கழுவினார்.
பின்னர், இயேசு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார்.
இயேசுவை நேசித்த மக்கள் பலரும் கதறி அழுதனர்.
அந்நிலையிலும் இயேசு, ‘எனக்காக யாரும் அழ வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள்பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று கூறினார்.
கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.
அன்றைய தினத்தில் மதிய நேரமே வானம் இருண்டு காணப்பட்டதாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, விசுவாசம்.
இந்த உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் அனுஸ்டிக்கின்றனர்.