Sports
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்வையிட இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை எதிர்வரும் பங்களாதேஸ், இலங்கையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து ஆரம்பமாகும் என அவர் கூறினார்.
எனினும் 40 வீத ரசிகர்களை மாத்திரம் மைதான அரங்கிற்குள் உள்வாங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை கூறியுள்ளார்.