Connect with us

Sports

இலங்கை லெஜண்ட்ஸ் அணியை தோற்கடித்த இந்திய லெஜண்ட்ஸ் அணி சாம்பியனானது, டில்சான் தொடர் நாயகன்

Published

on

வீதி பாதுகாப்பு வோல்ட் சீரிஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

இந்தியாவின் ராஜ்பூரில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.

இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில்; 4 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும், யூசுப் பத்தான் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் பந்து வீச்சில் ரங்கன ஹேரத், ஜயசூரிய, மஹரூப் மற்றும் வீரரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு 182 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்ட பதிலளித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களை சந்தித்து 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய லெஜண்ட்ஸ் அணியின் பந்து வீச்சில் யூசுப் பத்தான் மற்றும் இர்ப்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக யூசுப் பத்தான் தெரிவானதுடன் தொடரி;ன் ஆட்டநாயகனாக இலங்கை லெஜண்ட்ஸ் அணி தலைவர் திலகரத்ன டில்சான் தெரிவானார்.