Connect with us

Sports

T20 தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்

Published

on

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்களை கொண்ட T20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

T20 தொடரின் ஐந்தாவது போட்டி நேற்றிரவு (20) அஹதாபாத்தில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி பூனேயில் இடம்பெறவுள்ளது.