Connect with us

Sports

Ashes: இங்கிலாந்தை மிரட்டும் அவுஸ்திரேலியா

Published

on

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான Ashes டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

அதற்கமைய அந்த அணி சற்று முன்னர் வரை 7 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியீல் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஸ் ஹாசில்வூட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.