முக்கிய செய்தி
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு…!
எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைத்து புதிய விலை 850 ரூபாவாகும்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெள்ளை பூண்டு 15 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 680 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.