முக்கிய செய்தி
20 விஷேட பொலிஸ் குழுவினரால் 13 பேர் கைது
20 விஷேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு ஆதரவளித்ததாக சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19 ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.