Connect with us

முக்கிய செய்தி

உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக 1990 சுவசெரிய சேவை தெரிவு!

Published

on

சுவசெரிய சேவையை உலக வங்கியானது உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது,
சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையானது உலகில் வேகமாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரேசர், தெற்காசியாவில் வறுமையை ஒழித்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் உலக வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சுவசெரியகுறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டு நாட்டில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், 1990 ஆம் ஆண்டு முதல் 1.8 மில்லியன் இலங்கையர்கள் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.மேலும், அழைப்பு வந்த 12 நிமிடங்களில் உதவி தேவைப்படுவோரை அருகிலுள்ள மருத்துவமனை அல்லது பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல சுவசெரிய உதவியுள்ளது
அந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது உலகின் மிக வேகமாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக சுவசெரியவை பெயரிட்டுள்ளது.2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் சிறப்புச் சட்டத்தின் மூலம் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையானது ஒரு சுயாதீனமான தனியார் அமைப்பாக நிறுவப்பட்ட பின்னர் மிகவும் திறமையானதாக உலக வங்கி அறிக்கை காட்டுகிறது.தெற்காசியாவில் ஒரு புரட்சிகர டிஜிட்டல் ஹெல்த் மற்றும் எமர்ஜென்சி சேவை திட்டமான சுவசெரியவளரும் நாடுகளில் முன்னோடியாக இருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிடுகிறது.