Connect with us

முக்கிய செய்தி

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை

Published

on

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று(19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக  சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *