முக்கிய செய்தி
அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை!
அனுமதியின்றி வனப்பகுதிகளுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.வனப்பகுதிகளில் இடம்பெறும் தீப்பரவல் சம்பவங்கள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள வனங்களில் தீப்பரவல் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாகவே, அதிக வனங்களில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.