முக்கிய செய்தி
ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரையில் பல தவறான தரவுகள்
நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையில் தவறான தரவுகள் காரணமாக நீக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த உரை அடங்கிய புத்தகமும் கடந்த செவ்வாய்கிழமை அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தரவுகள் சரியாக இல்லாததால், ஜனாதிபதியின் உரை மீண்டும் சரியாகச் சேகரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு, அமர்வு தொடங்கிய 7ஆம் திகதி உறுப்பினர்களுக்கு நகல் உரை வழங்கப்பட்டது.
ஜனாதிபதியின் உரைக்காக நிதியமைச்சு வழங்கிய தரவுகளில் சுமார் 1000 பில்லியன் ரூபா பெறுமதியான தவறான தரவுகள் இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியம் கனிம எண்ணெய் விற்பனை மூலம் மாதாந்தம் 11 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கிறது.ஆனால் ஜனவரி மாதத்தில் மட்டும் பெட்ரோலிய விற்பனை மூலம் 21 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், ஜனவரி மாதத்தில் வற் வரி வருமானத்தில் 55 பில்லியன் ரூபா பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
தவறான தரவுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சின் அதிகாரிகளின் திறமையின்மை குறித்து குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளால் பெறப்பட்ட தரவுகளை முழுமையாக நம்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் நிதி அமைச்சின் அதிகாரிகளை இவ்வாறு விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.