முக்கிய செய்தி
மீண்டும் உயர்கிறது கரட் விலை – ஏனைய மரக்கறிகள் ஒரளவு விலை குறைவு..!
நுவரெலியா கரட்டின் விலை தற்சமயம் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த கரட் இன்று (05) 200 ரூபாய் விலை அதிகரிப்பு ஏற்பட்டு கிலோ ஒன்றுக்கான மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக காணப்படுகிறது.
இதனை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று (05) வெளியிட்டுள்ள விலை பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், கோவா 420 ரூபாய், கரட் 850 ரூபாய், லீக்ஸ் 420 ரூபாய், ராபு 120 ரூபாய், இலை வெட்டா பீட் 470 ரூபாய், இலை வெட்டிய பீட் 570 ரூபாய், உருளை கிழங்கு 320 ரூபாய், சிவப்பு உருளை கிழங்கு 340 ரூபாய்,
நோக்கோல் 370 ரூபாய் என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல்நாட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் மரக்கறிகள் விலையும் ஒரளவு விலை குறைவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.