Connect with us

முக்கிய செய்தி

முட்டை விலை ரூ. 58 ஆக அதிகரிப்பு!

Published

on

முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
முட்டையை மொத்த விலையில் ரூ.60க்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், குளிர்பதனக் கிடங்கில் முட்டைகளை சேமித்து வைத்த இடைத்தரகர்கள் குழுவொன்று முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *