முக்கிய செய்தி
முன்னாள் சுகாதார அமைச்சர் இன்று நீதிமன்றில் முன்னிலை !
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மாளிகாகந்த நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை 9 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்படி, சுமார் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்றைய தினம் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது