முக்கிய செய்தி
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
காலி முகத்திடல் பகுதியை அண்மித்த பல வீதிகள் இன்று (03) பிற்பகல் 2 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
76 ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதுவரை குறித்த வீதிகள் மூடப்படும். குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து கடமைகளில் 5000இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.