Connect with us

முக்கிய செய்தி

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Published

on

நிதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது வருடாந்த நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருடாந்த நிதி அறிக்கை
அதன் பின்னர் வருடாந்த நிதி அறிக்கையுடன் வெளியிடப்படவுள்ள கணக்காய்வாளரின் சாராம்ச அறிக்கையை குறித்த நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 3 மாதங்கள் போதுமானது என கணக்காய்வாளர் நாயகம் கூறியுள்ளார்.

வருடாந்த நிதி அறிக்கையுடன் வெளியிடப்படவுள்ள கணக்காய்வாளரின் சாராம்ச அறிக்கை, மே 31ஆம் திகதிக்கு முன்னதாக விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.