முக்கிய செய்தி
விபத்தில் சனத் நிஷாந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இன்று அதிகாலை கந்தானைக்கு அருகில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ஒன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்துடன் மோதி பின்னர் வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
ஜீப்பில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 72542 ஜெயக்கொடி மற்றும் ஜீப் சாரதி ஆகியோர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்