முக்கிய செய்தி
விபத்தில் தந்தை, மகன் பலி, தாய் படுகாயம்
ஆனமடுவ, லபுகல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 38 வயதுடைய நபரும் அவரது 10 வயது மகனும் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் லபுகல ரஜமஹா விகாரைக்கு முன்பாக நின்று கொண்டிருந்த லொறியின் மீது மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் STF அதிகாரி ஆவார்.