உள்நாட்டு செய்தி
டேனில் மெட்வதேவ் அவுஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஸ்ய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி ரஸ்யாவின் டேனில் மெட்வதேவ், கிரேக்கத்தின் டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.
மெட்வதேவ் தரவரிசையில் 4 ஆவது இடத்திலும், சிட்சிபாஸ் 5 ஆவது இடத்திலும் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மெட்வதேவ் 6-4, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் மெட்வதேவ் நம்பர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.