Connect with us

Sports

அவுஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம்: ஆஸ்லே பேர்டி சாம்பியனார்

Published

on

அமெரிக்க வீராங்கனை கோலின்ஸை 6-3, 7(7)-6(2) என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி அவுஸ்ரேலியாவின் ஆஸ்லே போர்டி அஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

அவுஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நம்பர் வன் வீராங்கனை அவுஸ்திரேலியாவின் ஆஸ்லே பேர்டி, அமெரிக்காவின் 27 ஆம் நிலை வீராங்கனையான டேனிலே கோலின்ஸை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 6-3 என பேர்டி எளிதாக கைப்பற்றினார்.

ஆனால், 2 ஆவது செட்டில் கோலின்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதனால் இருவரும் செட்டை மாறிமாறி கைப்பற்றினார்.

இதனால் 2 ஆவது செட் 6-6 என சமன் அடைய டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

டை பிரேக்கரை 7-2 என ஆஸ்லே பேர்ட்டி கைப்பற்றி 6-3 ,7(7)-6(2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றதோடு, சொந்த மண்ணில் கிராண் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த 44 வருடமாக அவுஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சொந்த நாட்டைச் சேர்ந்தவர் கைப்பற்றியது கிடையாது.

தற்போது பேர்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.