Connect with us

Sports

அவுஸ்திரேலியா ஓபன்: சாம்பியனார் ஜோகோவிச்

Published

on

அவுஸ்திரேலியா ஓபன்; இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ரஸ்ய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அவுவஸ்திரேலியா ஓபனில, நம்பர் வன் வீரரான சேர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் 4 ஆம் நிலை வீரரான ரஸ்யாவின் டேனில் மெட்வதேவ்வை எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றினார்.

2 ஆவது செட்டை 6-2 எனவும், 3 ஆவது செட்டை 6-2 எனவும் எளிதாக கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றதுடன் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

33 வயதான ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 9 முறை அவுஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபனை ஒரு முறையும், விம்பிள்டனை ஐந்து முறையும், அமெரிக்க ஓபனை மூன்று முறையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடதக்கது