Sports
அவுஸ்திரேலிய ஓபன் கிண்ணத்தை சுவிகரித்தார் நவோமி ஒசாகா
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று (20) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியை எதிர்க்கொண்டார்.
போட்டியின் ஆரம்பம் முதலே ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா, இறுதியில் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் பிராட்டியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஒசாக்கா வென்றுள்ளமை குறிப்பிடதக்கது.