முக்கிய செய்தி
பாராளுமன்ற சபை அமர்வு 24 ஆம் திகதியுடன் நிறைவு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற சபை அமர்வை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி வௌியிடுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பராளுமன்ற சபை அமர்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் பதவிக்காலங்களும் முடிவடையவுள்ளன.
அதற்கமைய பாராளுமன்ற சபை அமர்வு மீள ஆரம்பமான பின்னர் குறித்த தெரிவுக்குழுக்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளன.