முக்கிய செய்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் தனது பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார்…!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்த விரும்புவதாக சமிந்த விஜேசேகர தெரிவித்தார். சஜித் பிரேமதாச தம்மை தந்தையாகவே நடத்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.