முக்கிய செய்தி
விமான சேவைகள் அதிகார சபையின் பெண் அதிகாரி வெட்டி கொலை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின்,
பெண் அதிகாரி ஒருவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பெண் கட்டுநாயக்காவிலிருந்து மடபாத்தவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் அவரது கழுத்தை அறுத்தனர்.
பலத்த காயமடைந்த அவர் வேதர வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டாலும்,
அவரின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருந்தது. 39 வயதான இவர் ஒரு பிள்ளையின் தாயாவார்.
கொலையை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச்ச செல்ல முயற்சித்தபோதே கைதுசெய்யப்பட்டார்.
கஹத்துடுவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.