முக்கிய செய்தி
கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் 50,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா அரிசி தொகையை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த காலத்தில் இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதியை மேற்கொள்வது மிகவும் சிரமமானது என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், 21 ஆம் திகதிக்கு முன்னர் கீரி சம்பா அரிசியை குறிப்பிட்ட அளவு இறக்குமதி செய்ய முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று(02) அல்லது நாளை(03) கீரி சம்பா அரிசி தொகையொன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50,000 கிலோகிராம் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.