முக்கிய செய்தி
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த விவசாய தேசிய சம்மேளனத்தின் இணைப்பாளர் ஜயந்த ரந்தெனிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இடம்பெறாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்