முக்கிய செய்தி
பருத்தித்துறையில் தீ பரவல் – இருவர் பலி…!
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இருவர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் ரெஜிபோர்ம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை களஞ்சியப்படுத்தும் இடமொன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த களஞ்சியசாலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த உடபுஸ்ஸலாவை – லோமன்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இருவரே தீப்பரவலில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.