முக்கிய செய்தி
பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
97 பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி ( VAT திருத்தம்) சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் போது 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 100 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் 55 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
அண்மையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க எதிராக வாக்களித்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆதரவாக வாக்களித்தார்.