உள்நாட்டு செய்தி
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதை அவதானித்ததாக கூறிய அமைச்சர், இலட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் இல்லாமல் போனதாக கூறினார்.
இலங்கை போன்று பாரியளவில் கடன் சுமையால் நசுக்கப்பட்டுள்ள நாட்டை, முழுமையாக முடக்குவதாக இருந்தால், அதற்கான பொருளாதார பலம் இல்லை. முடக்குவதற்கான செய்வதற்கான தேவை இருக்கின்ற போதிலும் அதனை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டை முடக்காமல், திறந்து வைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கவே முயற்சிப்பதாகவும் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய சவாலே தற்போது உள்ளதாகவும் ஆகையால் இயலுமானவரை நாட்டை திறந்து வைத்து, நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கேள்வி : கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை புதைப்பது தொடர்பில் பிரதமர் அண்மையில் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். எனினும் ஆளும் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஆளும் தரப்பை சேர்ந்த ஒருவர் பிரதமரின் உரை செல்லுபடியற்றது என கூறுகின்றார்?
பதில் : பிரதமர் தனது அபிப்பிராயத்தை முன்வைத்தார். அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் தன்னுடைய விருப்பத்தையே அவர் கூறினார். எனினும், பிரதமருக்கோ, ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ கொரோனா மரணங்கள் குறித்து தீர்மானிக்க முடியாது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதுகுறித்து தீர்மானிக்க வேண்டும். அவரும் தkது நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். அதுவரை தற்போது காணப்படும் ஒழுங்குவிதிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது
என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.