உள்நாட்டு செய்தி
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம்
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்.
மத்திய சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட பிரதேச வைத்தியசாலைகளிற்கு 11 வைத்திய உத்தியோகத்தர்கள் நேற்றயதினம் (15) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்களும், செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளிற்கு ஒரு வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் மகப்பேறு, இரத்த வங்கி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 9 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 பேர் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதுடன் ஒருவர் எதிர்வரும் நாட்களில் பொறுப்பேற்பார் என்று வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்தார்