முக்கிய செய்தி
24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள அஞ்சலகங்கள்
போக்குவரத்து விதி மீறல் அபராதம் மற்றும் அஞ்சல் செயற்பாடுகளை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்ட 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதி அஞ்சல் மா அதிபரினால் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனி தெரு, பத்தரமுல்லை, கல்கிஸை, நுகேகொட மற்றும் சீதாவகபுர ஆகிய அஞ்சல் நிலையங்கள் 24 மணித்தியாலமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.